கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு - பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

" alt="" aria-hidden="true" />


கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனதமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 


ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் விலை தொடர்பான போர் ஒன்றை சவுதி அரசு முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால், சீனா உட்பட சர்வதேச நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதியும் சீனாவில் குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கச்சா எண்ணெய்யின் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று ஒபெக் நாடுகள் அமைப்பு ரஷ்யாவிடம் கூறியது.


 இதற்கு ரஷ்யா மறுத்துள்ளதால், சவுதி அரசு, தான் விற்பனை செய்யும் கச்சா எண்ணெய்யின் விலையை குறைத்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் 1991-ம் ஆண்டு வளைகுடா போரின் போது ஏற்பட்ட சரிவிற்கு பிறகு கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது.


கடந்த வாரம் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 44.80 டாலராக இருந்த நிலையில், தற்போது 14.25 டாலர், அதாவது 31.5 சதவிதம் குறைந்து 31.02 டாலராக உள்ளது. அதே போல், WEST TEXAS INTERMIDIATE கச்சா எண்ணெய்யின் விலை 37 டாலராக இருந்த நிலையில், தற்போது 10.59 டாலர், அதாவது 33 சதவிதம் குறைந்து 27.59 டாலராக உள்ளது.


நம் தேவைக்கான கச்சா எண்ணெய்யில், சுமார் 83 சதவிதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம். சவுதி அரேபியாவில் இருந்து ஒரு மாதத்திற்கு 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது.பொதுவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால், இந்தியாவிற்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரத்து 700 கோடி செலவு குறையும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் 10 டாலர் குறைந்தால், பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 6 ரூபாய் வரை குறையும், தற்போது கச்சா எண்ணெய் விலை 27.59 டாலராக உள்ளது.


பெட்ரோல் விலை ரூ 30 வரையிலும், டீசல் விலை ரூ.10 வரையிலும் குறைக்க முடியும், ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்த அடுத்த நொடியே விலையேற்றத்தை அறிவிக்கின்றன. ஆனால் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மக்களை ஏமாற்றுகின்றன. மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் சுயலாயத்திற்கு அதனை வழங்குவது கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை எண்ணெய் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தாலும், அதனை மத்திய அரசு கண்டு கொள்வது இல்லை.


இதனால் எண்ணெய் நிறுவனங்கள் செய்யும் பகல் கொள்கைக்கு மத்திய அரசு துணை போகிறதே என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆகவே பெட்ரோல். டீசல் விலையை உடனடியாக குறைத்து மக்களுக்கு முழு பலன் கிடைக்க மத்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் விலையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.



Popular posts
நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உடனடியாக அகற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
விற்பனை மந்தம் காரணமாககோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Image
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு
Image
காய்கறி வியாபாரிகள் 125 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கான சளி சேகரிக்கப்படுகிறது
Image